காக்கங்கரை பகுதியில் மறைந்த திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே ஜி ரமேஷ் திருவுருவ படத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல் ஏவும், கந்திலி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான கே.ஜி ரமேஷ் கடந்த (15:08:24 )அன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட காக்கங்கரை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிமுக கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமையான இன்று நேரில் சென்று இறந்த கே ஜி ரமேஷின் உருவப் படத்தை திறந்து வைத்தார் மலர்தூவி மரியாதை செய்தார் மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே சி வீரமணி, கேபி அன்பழகன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு, மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்