இலங்கையில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கிய நிலையில், அங்கபிரதட்சணம் செய்தபடியே தேரை பின் தொடர்ந்து சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் இலங்கை மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.