மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டு அதிகாரிகள் தன்னை நோகடித்துவிட்டதாக நடிகை நமீதா புலம்பி உள்ளார். யார்மீதும் புகார் அளிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை, ஆனால் இனிமேல் இதுபோன்று யாருக்கும் நடக்க கூடாது என்றும் கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்..