துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் , தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்குகள் செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும் என விமர்சித்தார்.