Also Watch
Read this
"நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை" "சிவராமன் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்"
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதில்
Updated: Aug 30, 2024 09:28 AM
கொல்கத்தாவில் நடைபெற்ற சம்பவத்தை மறக்கவும் கூடாது மன்னிக்கவும் கூடாது இது ஒரு திட்டமிட்ட வன்புணர்வு
கிருஷ்ணகிரியில் நடந்த முன்னாள் நாம் தமிழர் கட்சியை நிர்வாகி சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை அவர் தவறு செய்திருக்கிறார் குற்ற உணர்ச்சியால் தான் அவர் இறந்தார்
யானையை கொடியில் பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை தனி மனிதனுக்கு மாநிலத்திற்கோ கட்சிக்கோ யானை சொந்தமா எனவும் கேள்வி
சீமானுக்கு கோடி கோடியாக பணம் வருகிறது அதனால் அவர் ஆதரித்து பேசுகிறார் என்று சொல்கிறார்கள் வேண்டுமென்றால் நீங்கள் ஆதரித்து பேசுங்கள் உங்களுக்கு கேஸ் (பணம்) வருகிறதா அல்லது கேஸ் (வழக்கு )வருகிறதா என்று பார்க்கலாம்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.. கண்டன கோஷங்களும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது..
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
கொல்கத்தாவில் நடைபெற்ற சம்பவம் கூட்டு வன்கொடுமை என்று அனைவருக்கும் தெரிகிறது ஆனால் ஒருவரை மட்டும் கைது செய்து வைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டு போவது தான் வேடிக்கையாக இருக்கிறது..
திட்டமிட்ட வன்புணர்வு இது கொலை கடுமையான வன்மம் இருந்திருக்க வேண்டும். கல்லூரியின் முதல்வர் இதை தற்கொலை என்று ஏன் சொல்கிறார் அதற்கான அவசியம் என்ன?
இந்த நாட்டில் நடக்கிற 100 குற்றங்களை 99 குற்றங்கள் போதையில் தான் நடக்கின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் போதையினால் மட்டுமே வெட்டி இருக்க முடியும்..
எல்லோரும் இந்த செயலை கண்டித்து இருக்க வேண்டும் இதை இழுத்துக் கொண்டு போவது தான் வேடிக்கையாக இருக்கிறது. போராடுபவர்களை நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள் நடவடிக்கை எடுங்கள் நாங்கள் கைவிடுகிறோம்..
அரசு மருத்துவரக்கே உரிய கழிவிடம் இல்லை ஓய்வெடுக்கும் இடமில்லை..
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்சிசி கேம்ப் நடத்தி அதில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை அவர் குற்றம் செய்திருக்கிறார் குற்ற உணர்ச்சியில் தான் அவர் இறந்திருக்கிறார்
இதற்கு முன்பாக கூட எங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தால் அதை நான் சாகப் போகிறேன் என்று அதை எனது தம்பிகள் இடம் கொடுத்து அது என்ன என்று நான் விசாரிக்க சொன்னேன் அவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததை நாம் தமிழர் கட்சி தம்பிகள் தான்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருந்தது அதனால் நாங்கள் அதை எதிர்ப்போம் இந்த சம்பவத்தை நாங்கள் எதிர்க்கவில்லை
சாதி பெருமை ஆணவ படுகொலை இன்று சொல்கிறோம் அல்லவா நான் பெரிய சாதி என்கிற திமிரோடு ஒரு பெண் பையனை கொலை செய்வது இந்த மாதிரி வன்புணர்வு கொலைகள் இதற்கு வந்து சிறை தண்டனை ஏற்படுவது அல்ல 2016 தேர்தல் அறிக்கையில் நான் சொல்கிறேன் எந்த குற்றத்திற்கும் மரணம் தண்டனையாக இருப்பதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை ஆனால் இந்த குற்றத்திற்கு மரணம் தவிர வேறு தண்டனை இல்லை
கொல்கத்தா பாலியல் வழக்கை பாஜக தான் வெளிக்கொண்டு வந்தது என்ற கேள்விக்கு?
அதற்கு பாராட்டுகள்..
வினோஷ் போகம் தோற்கடிக்க பட்டது அவளுக்கு அவமானம் அல்ல நாம் தான் வெக்கி தலை குனிந்து கண்ணீர் வடிக்க வேண்டும்.. அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும் நாம் 71 வது இடத்தில் இருப்பதாகவும் இதற்கு சினிமா வசனத்தை கூறிய ஒன்று பெருசா இரண்டு பெருசா 71 தான் பெரிது என்று கூறிக்கொள்ள வேண்டும்..
யானை ஸ்பெயின் தான் இருக்கிறதா இங்கு இல்லையா யானை ஒரு தனி மனிதனுக்கு மாநிலத்திற்கோ கட்சிக்கோ சொந்தமா தேர்தல் ஆணையத்தில் நான் கூட தான் பேசினேன் நான் பலியை கேட்டேன்..
தமிழ் தேசிய அரசியலை தம்பி விஜய் எடுக்கவில்லை என்றால் அண்ணன் நான் எடுக்கிறேன்.. தமிழீழ அரசியல் எனக்கு நேர்ந்து வீழ்த்தப்பட்டிருக்கிறதா அல்லது பட்டா போட்டுக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா
சீமானுக்கு கோடி கோடியாக பணம் வருகிறது அதனால் அவர் ஆதரித்து பேசுகிறார் என்று உங்களுக்கு தெரிகிறதா அப்பொழுது நீங்களும் பேச வேண்டியதுதானே பேசுங்கள் உங்களுக்கு கேஸ் வருகிறதா அல்லது கேஸ் வருகிறதா என்று பார்க்கலாம்..
யானை ஆப்பிரிக்காவிற்கு மட்டும் சொந்த மாதிரியோ வாகை மலர் இங்க யாருக்கும் சொந்தம் மாதிரியோ?திமுக மற்றும் திமுக சண்டே நடக்கிறதா? இல்லையா.
திருமாவளவன் Vs தமிழிசை.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
கடந்த வாரம் கலங்க வைத்த கொலை.. மயானத்தில் காவலரை வெட்டிய ரவுடி..
கடலுக்கு ஏதுய்யா எல்லை? .. குழந்தை குட்டிகளுடன் குமுறி அழுத பெண்கள்...
தமிழ் நடிகர்களுக்கு சம்பள நிறுத்தம்?.. நடிகர் சங்கம் Vs தயாரிப்பாளர் சங்கம்
தினுசு தினுசாய் குடிநீர் குழாய்கள்.. ரூ.30 கோடியில் ஜல் ஜீவன் திட்டம்..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved