(( சுந்தரராமன் - மருத்துவர் )) (( சென்னை - வடபழனி குரங்கு அம்மை நோய் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் பரவியது குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் அரிப்பு ஏற்படும்காய்ச்சல், தொண்டை வலி, சிறுநீர், மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் உடல் வலி, கழுத்து வலி, கை கால் வலி, இடுப்பு வலி ஏற்படும் என அறிவுறுத்தல் உடலில் சிறிய அளவிலான கட்டிகள் ஏற்படும் என மருத்துவர்கள் தகவல்குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதன் மூலம் பரவக்கூடியதுகுரங்கு அம்மை நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை-மருத்துவர்கள் குரங்கம்மைக்கு தடுப்பூசி உள்ளது-உலக சுகாதார அமைப்பு தகவல்பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்ட அடுத்த 15 நாட்களில் சரியாகி விடும்கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு என தகவல் - சுந்தரராமன்குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் )) (( "குரங்கு அம்மை நோய் (Mpox) - உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு....""தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை...""கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்த திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் இருந்தால் அவருக்கு mpox தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு....""காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை செய்ய வேண்டும்...""விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுறுத்தியுள்ளது.."குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....கொரோனாவைப் போல 2022 முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது...தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...இந்த நிலையில், ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது...ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளன...அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு இல்லை...இந்த தொற்று இல்லாத நாடுகளில் அதிகரித்து வரும் பாதிப்பை கருத்தில் கொண்டு, எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியம் மற்றும் தடுப்பு நடவடிக்கை காண வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வெளியிட்டுள்ளது...இந்த தொற்றின் முக்கிய அறிகுறி தோல் அரிப்பு, சீழ் வழிதல். அதனுடன் 2-4 வாரங்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு அடைதல், நிணநீர் கணுக்கள் வீக்கம் அடையலாம்....Mpox பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து பரவும். தோல் புண்களை PCR மூலம் சோதித்து இந்த mpox உறுதி செய்யப்படுகிறது...Mpox நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதிக்கபட்டவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலமாகவும் இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்...கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்த திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் மேல் கூறிய அறிகுறி இருந்தால் அவருக்கு mpox தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது....அந்த வகையில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களது பகுதியில் இந்த அறிகுறியுடன் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் அபாயகரமான தொற்று என்பதால் அரசு அல்லது தனியார் மருத்துவமனை ஊழியர்களும் தொற்று குறித்து உறுதி செய்யவேண்டும். தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். சென்னை, SPHL மருத்துவமனைக்கு Samples அனுப்பி சோதனை செய்யலாம்...குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுககு சோதனை செய்யவேண்டும். ..மருத்துவர்கள் mpox குறித்து அறிந்துகொண்டு இருக்க வேணும். கடந்த 21 நாட்களில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.