விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இடையிலான உறவை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் என்றே வகைப்படுத்தலாம்... அரசியலில் சிறுத்தைகள் என்றால் கலையுலகில் ரஞ்சித்தான் என கொண்டாடி தீர்த்த திருமா இப்போது ரஞ்சித் இருக்கும் திசை பக்கமே திரும்பவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறாராம்....ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து பா.ரஞ்சித் பேசும் போது திமுகவையும் அதன் கூட்டணியில் இருப்பவர்களையும் விமர்சித்து பேசியிருந்தார். இது விசிக தலைவர் திருமாவளவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதன் விளைவாகவே விசிக நடத்தும் கூட்டங்களை தவிர்த்து மற்றவர்கள் நடத்தும் பேரணியில் தோழர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று காணொலி வாயிலாக அறிவுறுத்தியிருந்தார் திருமாவளவன்... இது பா.ரஞ்சித்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பேரணி கூட்டத்தில் பேசிய பா.ரஞ்சித், தன்னை அண்ணன் திருமாவளவனுக்கு எதிரானவன் போல் சிலர் சித்தரிப்பதாக கூறியதுடன் திருமா அண்ணனை கைவிட மாட்டோம் என்றும் உருக்கமாக பேசினார்.பா.ரஞ்சித்தின் தனித்த செயல்பாடு காரணமாகவே திருமாவளவனும் அவரைவிட்டு தள்ளியிருக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. பொதுவாகவே பூர்வகுடி மக்களின் அரசியல் பேசும் சிறு படங்களை கூட கொண்டாடித்தீர்க்கும் திருமாவளவன், விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலானை பற்றி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.. இதற்கு காரணம் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தான் என சொல்லப்படுகிறது...சார்பட்டா பரம்பரை வெளிவந்த போது நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தங்கலான் படம் வெளிவந்தது பற்றி எந்த ஒரு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிக்காமல், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தை பாராட்டி தள்ளியிருக்கிறார் திருமாவளவன்..அதோடு மட்டும் நிறுத்தாமல் நேரடியாக இயக்குநர் மாரி செல்வராஜின் இல்லத்துக்கே சென்று ஆரத்தழுவி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து அவரது குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.மாரி செல்வராஜும், பா.ரஞ்சித்தும் தனது இரண்டு மகன்கள் என கூறிய திருமாவளவன், தற்போது ஒரு மகனை மட்டும் கொண்டாடியது மற்றொரு மகனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தாதா, ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என செயல்படலாமா என ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அப்படி ஒரு சூழலை உருவாக்கியதே ரஞ்சித் தான் என்கின்றனர் திருமா ஆதரவாளர்கள்திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்சித் இடையிலான உறவுஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின் கசந்த நட்பு?அரசியலில் சிறுத்தைகள் என்றால் கலையுலகில் ரஞ்சித் - திருமாரஞ்சித் இருக்கும் திசை பக்கமே திரும்பாமல் ஒதுங்கிய திருமாஆம்ஸ்ட்ராங் கொலை - திமுகவையும் விமர்சித்த பா.ரஞ்சித்திமுக கூட்டணி கட்சிகளையும் விமர்சித்த இயக்குநர் பா.ரஞ்சித்பா.ரஞ்சித் பேச்சால் விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்பா.ரஞ்சித் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என சூசக அறிவுறுத்தல்திருமாவின் அறிவுறுத்தலால் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு வருத்தம்திருமாவளவனுக்கு எதிராக என்னை சித்தரிக்கிறார்கள்- பா.ரஞ்சித்திருமா அண்ணனை கைவிட மாட்டோம் - பா.ரஞ்சித் உருக்கம்பா.ரஞ்சித்தின் தனித்த செயல்பாடு காரணமாக திருமாவளவன் விலகல்பூர்வகுடி மக்களின் அரசியல் பேசும் படங்களை கொண்டாடும் திருமாதங்கலானை பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்?ரஞ்சித் உடனான கருத்து வேறுபாடு தான் காரணம் என தகவல்சார்பட்டா பரம்பரை படத்தை கொண்டாடி தீர்த்த திருமாவளவன்மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தை பாராட்டிய திருமாமாரி செல்வராஜின் இல்லத்துக்கே சென்று உணவருந்தி பாராட்டு