உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பிரதமரின் உக்ரைன் பயணம் உலக அரங்கை உற்றுநோக்க வைத்திருக்கிறது...!ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் இந்தியா இதுவரை ஒரு சார்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல், எப்போதும் போல அமைதியை வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில் தான் அண்மையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்று புதினை சந்தித்து பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதாவது இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவுக்கு தான் என்பதை போல ஒரு மாயை உருவானது. இதனிடையே தான் போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, குண்டு துளைத்திடாத சிறப்பு ரயில் மூலம் நீண்ட நேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகரை சென்றடைந்தார். பிரதமர் மோடியை அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்றனர். கீவ் நகரில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கையில் மூவர்ண கொடியுடன் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கமிட்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் கீவ் நகர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி....போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்று அழைத்து சென்றார் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி... போரின் கோரத்தை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் பிரதமருக்காக திரையில் காட்சிப்படுத்தப்பட்டன. அச்சமயம் ஜெலன்ஸ்கியின் தோள் மீது கை போட்டபடி, முகம் வாடி காணப்பட்டார் பிரதமர் மோடி....தொடந்து இரு தலைவர்களும் குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.உக்ரைன் அதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனிருந்தார்.(BREATH)தொடர்ந்து இரு தலைவர்களும் போர் சூழல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (BREATH)போர் சூழலில் இந்தியா ஒருபோதும் நடுநிலை வகித்ததில்லை என ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்த பிரதமர் மோடி, எப்போதும் தாங்கள் அமைதியின் பக்கமே நிற்பதாக விளக்கமளித்தார். அமைதியை போதித்த மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து வந்தவன் என்றும் அவர் கூறினார்.(BREATH)ஆனால் இந்தியா உக்ரைனின் பக்கம் நிற்க வேண்டும் என்றும், இது புதின் என்ற ஒரு மனிதருக்கும் உக்ரைன் என்ற நாட்டுக்கும் இடையேயான போர் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும், இந்தியா மிகப்பெரியா நாடு, அதனால் புதினை தடுத்து நிறுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.(BREATH)தொடர்ந்து, உக்ரைனுக்காக இந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ கருவிகளை பிரதமர் மோடி ஜெலன்ஸ்கியிடம் ஒப்படைத்தார். பின்னர் உக்ரைன் பயணத்தை முடித்துக்கொண்ட மோடியை மீண்டுமொருமுறை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தார் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி.((போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் உக்ரைன் பயணம்குண்டு துளைத்திடாத ரயில் மூலம் உக்ரைன் தலைநகருக்கு பயணம்இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்புமூவர்ண கொடியுடன் பாரத் மாதா கீ ஜே என உற்சாக முழக்கம்மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இந்திய வம்சாவளியினர்கீவ் நகர் பூங்காவில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர்போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவிடம் சென்ற மோடிபிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிஜெலன்ஸ்கியின் தோள் மீது கை போட்டு ஆறுதல் தெரிவித்த மோடிபோரால் ஏற்பட்ட பாதிப்புகளின் காட்சிகளை கண்டு பிரதமர் சோகம்குழந்தைகளின் நினைவிடத்தில் வாடிய முகத்துடன் பிரதமர் அஞ்சலிஅதிபர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்புஇருநாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தலைவர்கள் ஆலோசனைவெளியுறவு அமைச்சர்கள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்துஇந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கும் - பிரதமர் மோடிகாந்தி பிறந்த மண்ணில் அமைதி மட்டுமே போதனை- பிரதமர்இந்தியா உக்ரைன் பக்கம் நிற்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை"உக்ரைனின் ஒட்டுமொத்த மக்களும் புதினுக்கு எதிராக நிற்கிறோம்"இந்தியாவால் நிச்சயம் புதினை தடுத்து நிறுத்த முடியும் - ஜெலன்ஸ்கிஉக்ரைனுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிய பிரதமர் மோடி