சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற மண்டல கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பாதி பேர் வராததால் காத்து வாங்கும் மாமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள்* சென்னை மாநகராட்சி மண்டலம் ஒன்று கூட்டம் திருவொற்றியூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி மு தனியரசு தலைமையில் நடைபெற்றது திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் ஒன்றில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர் இதில் அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் 11 திமுக மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் மாதந்தோறும் நடைபெறும் மண்டல குழு கூட்டத்திற்கு பெரும்பாலும் 14 மாமன்ற உறுப்பினர்களும் வருவதில்லை அதேபோல் இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்திற்கு 2,3,7,9,12 ஆகிய வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் வரவில்லை *மாநகராட்சி மண்டல அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரு விளக்கு மற்றும் காவல்துறை தீயணைப்புத் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் ஆனால் தங்கள் வார்டுகளில் வாக்களித்த வாக்காளர்களுக்கு அடிப்படை தேவைகளை மன்ற கூட்டத்தில் கேட்டு பெறவேண்டிய உறுப்பினர்கள் இப்படி கலந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர் இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மன்ற கூட்டங்களிலும் நாம் என்ற உறுப்பினர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்