ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் CRPF வீரர் வீர மரணமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்கள் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (CRPF) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.