தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடலை அறிமுகப்படுத்திய அக்கட்சி தலைவர் விஜய்க்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் எத்தகைய அரசியலை முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பதை பொறுத்துதான் அவரது கட்சியை குறித்து கருத்து சொல்ல முடியும் என தெரிவித்தார்.