ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக பயணிகளை மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே நடைபெற்றது - 250க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் துறையினர், ரயில்வே துறை அமைச்சர் என பலரும் கலந்து கொண்டனர்.* இந்தியாவின் மிகப்பெரிய துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்களுடைய பயணத்திற்காக ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக அவ்வப்போது ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது. ரயில் விபத்துகளின் போது உடனடியாக மீட்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடைய ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக எப்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தான தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே குட்செட் பகுதியில் இன்று நடைபெற்றது. இதற்காக ஒரு ஏசி மற்றும் இரண்டு பொதுப் பெட்டிகள் என மூன்று பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது. இந்த விபத்து கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்க ஒழிக்கப்பட்டது. . உடனே தளவாட பொருட்கள் அவசர சிகிச்சைக்கான மருத்துவ பொருட்கள் கிரேனுடன் ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் விபத்தாகி ஒரு ரயில் பெட்டியின் மேல் மற்றொரு ரயில் பெட்டி இருப்பது போலவும் அதிலிருந்து பயணிகளை மீட்பது உள்ளிட்ட மீட்பு பணிகள் குறித்தான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ரயில்வே துறை ஊழியர்கள் தேசிய பேரிடர் மீட்புத்துறையினர் தீயணைப்பு துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் ரயில் பெட்டியில் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பது போன்ற தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரு ரயில் பெட்டி மேல் மற்றொரு ரயில் பெட்டி விபத்து ஏற்பட்டது போல் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் உண்மையாக ரயில் விபத்து நடைபெற்றது என கருதி அந்த பகுதியில் பார்த்துவிட்டு சென்றனர். தமிழ்நாட்டிலேயே திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் விபத்துக்கள் நல்வாய்ப்பாக ஏதும் இதுவரை நடைபெறவில்லை ஒருவேளை நடந்தால் உடனடியாக செய்ய வேண்டிய மீட்பு பணிக்கான பயிற்சியாவும் ஒத்திகையுமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.