திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளான வேங்கிக்கால், நல்லவன்பாளையம், ஆடையூர், அடி அண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.