துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் செய்ய வேண்டியதை செய்வார் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த அவர், முதலமைச்சர் தம்முடைய ஆளுமைக்கு உட்பட்டு, நிர்வாகத்திற்கு செய்ய வேண்டியதை செய்வார் என்று தெரிவித்தார்.