ஆந்திராவின் கடப்பாவில் மேயர் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி பொதுமக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடப்பாவில் குப்பை வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சுரேஷ் பாபு கூறியிருந்தார். இதனை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்ட மக்கள் வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர், குப்பை கொட்டியவர்களை கைது செய்யக்கோரி, கடப்பாவில் உள்ள சின்ன சவுக் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.