மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி கொண்டு வந்ததாக கூறி சக பயணிகள் அவரை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. துலே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அந்த முதியவரின், கையிலிருந்த பைகளில் மாட்டிறைச்சி போன்ற ஒரு பொருள் இருப்பதை கண்ட சக பயணிகள் அவரிடம் என்ன கொண்டு செல்கிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த முதியவர், மாலேகானில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இறைச்சியை எடுத்துச் செல்வதாக கூறியபோது, தங்களின் புனித மாதமான சாவான் மாதத்தில் எப்படி இறைச்சி எப்படி எடுத்து வரலாம் என கூறி தாக்கினர்.