வெனிசுலாவில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட மறுதேர்தலின் முடிவுகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் முறைகேடு புகாரால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், நிகோலஸ் வெற்றி பெற்றதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.