மத்திய அரசால் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அரசு ஊழியர்களின் எதிர்காலம் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை இது பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.