காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவு திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான பிளிங்கன் இரண்டரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பது ஆகிய அமெரிக்காவின் முன்மொழிவுகளை நெதன்யாகு ஆதரிப்பதாக தெரிவித்தார்.