சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனி திருமஞ்சன விழாவின் போது கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதி கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் நடைபெற்றது. அப்போது, நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்றும், ஆறு மாத பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என பொதுதீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.