ஆகஸ்ட் மாதத்தை போலவே செப்டம்பரிலும் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனம் முதல் மிக கனமழை வரை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் பருவமழை 109 சதவிகிதமாக இருக்கும் எனவும் அதே நேரம் தென்னிந்தியா, வடக்கு பீகார், வடகிழக்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை துவங்கிய ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை மழைப்பொழிவு இயல்பை விட 7 சதவிகிதம் அதிகமாக இருந்ததாகவும், அதற்கு எல் நினோ விளைவு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.