உலகம் முழுவதும் வேகமாக குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தல் எதிரொலியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ஆம் தேதிசர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.