75 வயதான உடன் தமது ஓய்வை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்றால், வேறு வழிகளில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 17ம் தேதி மோடிக்கு 75 ஆவது பிறந்த நாள் வருவதாகவும், அன்றைய தினம், தீவிர அரசியலில் இருந்து ஒய்வு பெற்று மார்க்க தரிசன மண்டலில் மோடி சேர வேண்டும் எனவும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.