புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ள அனைவருக்கும் விரைவில் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், அதனை வழங்குவதில் எவ்வித தாமதமும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.