நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் ((Martha Louise ))அமெரிக்க ஆன்மீக குருவான டுரெக் வெரட்டை ((Durek Verrett,)) மணந்தார். 52 வயதான மார்த்தா லூயிஸ், 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அரசப் பணிகளில் இருந்து விலகினார். இவருக்கு "மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர் என" கூறிக்கொள்ளும் அமெரிக்க ஆன்மீக குருவான டுரேக் வெரெட் உடன் காதல் ஏற்பட இருவரும் 2019 ல் தங்கள் காதலை உறுதி செய்தனர். தற்போது இருவரும் அரசு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். ககேராங்கர் என்ற கடலோர பகுதியில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.