பாஜக தலைமையிலான மத்திய அரசில் வரி பயங்கரவாதம் நிலவுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். தனது நெருக்கமான கார்ப்பரேட் நண்பர்களுக்காக, மத்திய தர வகுப்பினரின் முதுகெலும்பை பிரதமர் மோடி உடைப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் வரி வசூலை விடவும் தனிநபர் வருமான வரி அதிகமாக வசூல் செய்யப்பட்டது குறித்த அட்டவணை ஒன்றை தமது வாட்ஸ்ஆப் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கிடைக்காத மத்திய தர வகுப்பினர் மீது கண்மூடித்தனமாக வருமான வரி வசூல் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பணவீக்கமும் விலைவாசியும் அதிபயங்கரமாக உயர்ந்துள்ள இந்த சூழ்நிலையில், எல்லாவற்றுக்கும் GST வரியை கொடுக்கும் நிலைக்கு மத்திய தர வகுப்பினர் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.