திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 44 வயதான மணிகண்டன், தனது வீட்டின் அருகே குடியிருந்த வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டது.