அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், தாய் சியாமளா ஹாரிஸை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்தார். சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த கால கசப்புகள், பிரிவினைகள் உள்ளிட்டவற்றை கடந்து, ஒட்டுமொத்த தேசமாக ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியிருப்பதாக தெரிவித்தார். மேலும் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் என உறுதியளித்த அவர், தனது தாய் சியாமளா கடினமான பாதைகளை கடந்து வந்தவர் எனவும், ஒவ்வொரு நாளும் அவரது பிரிவை நினைத்து வாடுவதாகவும் தெரிவித்தார். மேலும் தனது தாய் மேலிருந்து தன்னை பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பார் எனவும் உருக்கமாக பேசினார்