பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.சி.,எஸ்.டி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு மற்றும் கிரீமி லேயர் முறை பரிந்துரை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ள அவர், ஆளும் பாஜக அரசு தான் எஸ்.சி.,எஸ்.டி-க்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறது என்றால், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் இவ்விவகாரத்தில் அமைதி காப்பது மேலும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.