முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தெரிவிப்புவிசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரி புகார்தாரர் Y.பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழ்நாடு அரசு பதில் தாக்கல் செய்யுள்ளதுஅதில், இந்த வழக்கில் தொடர்புடைய 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஒப்புதல் ஆளுநரிடம் நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் இந்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு இணைத்து தாக்கல் செய்துள்ளது.