3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம் என உறுதியளித்தார்.