மக்கள் தொகைப் பெருக்கம் நம் நாட்டின் நிலைத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்குமென இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், எமர்ஜென்சி காலத்திற்குப் பிறகு மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நாம் தவறிவிட்டதாக கூறினார். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் போதிய கவனம் செலுத்தாதது, நம் நாட்டிற்கு மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், மக்கள் தொகை அதிகரிப்பால் இங்கே தனிநபர் நில விகிதம், அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளதைவிட குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.