அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 73 ஆயிரம் SiG-716 ரக ரைபிள்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், இந்த கூடுதல் துப்பாக்கிகள் முன்கள ராணுவ வீரர்களுக்காக ஏற்கனவே வாங்கப்பட்ட 72 ஆயிரத்து 400 துப்பாக்கிகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் AK-203 Kalashnikov துப்பாக்கிகளை தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 2019 பிப்ரவரியில் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 647 கோடி மதிப்பீட்டில் 72 ஆயிரத்து 400, SiG-716 ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது மீண்டும் 837 கோடி மதிப்பீட்டில் துப்பாக்கிக் கொள்முதலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.