மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு இந்த மாதம் அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் மூன்றாவது வாரத்தில், அகவிலைப்படியை மூன்று அல்லது நான்கு சதவிகிதம் அதிகரித்து அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நான்கு சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 50 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டாலும் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் காத்திருக்கின்றனர்.