கோவையில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனின் கல்விச் செலவிற்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற கால் டாக்ஸி ஓட்டுநர், இரண்டாம் இடம் பிடித்து 50 ஆயிரம் பரிசை வென்று அசத்தியுள்ளார். Boche Food Express என்ற உணவகம் நடத்திய அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்ற போட்டியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் பங்கேற்றார்.