திமுகவை அழிக்க வேண்டும் என கிளம்பிய அண்ணாமலை, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்தநிலையில், ஆர்.பி.உதயக்குமாரை போல யார் காலிலும் குனிந்து கும்பிடவில்லை என பதிலளித்தஅண்ணாமலை, தமிழகத்திற்காக உழைத்த கலைஞர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதை பெருமையாக தான் நினைக்கிறேன் என தடாலடியாக தெரிவித்தார்.