வக்ப் வாரியத்தின் கீழ் உள்ள எந்த சொத்தையும் மத்திய அரசு கையகப்படுத்தாது என்றும் அவை தொடர்ந்து வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனவும், வக்ப் வாரிய திருத்த மசோதாவுக்கான கூட்டு நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார். இந்த குழுவின் முதல் கூட்டத்தில், வக்ப் வாரிய திருத்த மசோதாவில் உள்ள பல அம்சங்கள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி எம்பிக்கள் மசோதாவை கடுமையாக எதிர்த்தனர்.வக்ப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களை நியமிப்பது, மாவட்ட ஆட்சியர்களுக்கு வக்ப் வாரிய அதிகாரங்களை வழங்குவது போன்றவற்றுக்கு இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், இந்த விளக்கத்தை ஜகதாம்பிகா பால் அளித்துள்ளார்.