logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home home போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.. கிறித்துவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.. கிறித்துவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

"தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகம்"

Updated: Sep 04, 2024 01:48 AM

0
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
"தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகம்"

ஹெராயின்,கொகைன், ஒ பி எம் போன்ற போதை பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது.

மத்திய கிழக்கு,பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்  போன்ற நாடுகளிலிருந்து  மில்லியன் டன் கணக்கில் கடத்தப்படும் போதை பொருட்கள் தமிழகம், கேரளா கடலோர பகுதிகளில் பறிமுதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் சின்டிகேட் வைத்து போதை பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறது.

முன்பு சிறப்பாக இருந்த  பஞ்சாப் மாநிலம் இன்று போதை பொருள் புழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம்...தேசிய வளர்ச்சிக்கு என்ஜின் ஆக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது, அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தவறான போதை பழகத்திற்கு சென்று விடுவார்கள் எனவும் ஆளுநர் ரவி பேச்சு.

போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த  நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறித்துவ மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதில் Choose life not drug என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றது.

கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு நடனங்களை மாணவிகள் மேடையில் செய்து காட்டி வருகின்றனர்.

பின்னர் மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் காலையில் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய நாட்டின் நாளைய பெண் தலைவர்களை என் முன்னாள் நான் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

நாரி சக்தி பற்றி பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார்...பெண் ஒரு குடும்பத்தின் முதுகெலும்பு.

இன்று பெண்களுக்கு எல்லா கதவுகளும் திறந்து உள்ளது.

தற்போது ஆண்களை விட பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

போதை பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்...அதை பற்றி இங்கு நாம் பேசி வருகிறோம்.

தனிநபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்ல சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதை பொருட்கள் சிதைத்து விடுகிறது.

ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள் விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மையாக இருந்தது...ஆனால் இன்று போதை பொருட்களால் அதன் நிலமை மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது...இன்று விற்பனை அதிகமாக உள்ளது. சிகரெட் வடிவில் விற்பனையாவதை ஏற்க முடியாது என்றார்.  ஹீரோயின்,கொகயின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது...இதற்கு இளைஞர்கள் அதிக அளவில் அடிமையாகி உள்ளனர்.

அவர்கள் வாழ்க்கையே சிதைந்து போகிறது...போதை பொருட்களால் அவர்கள் மட்டும் சிதைந்து போகவில்லை அவர்கள் குடும்பமும் சிதைந்து போகிறது மேலும் சமூகமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

பல பில்லியன் கணக்கில் பணம் பார்க்கக்கூடிய தொழிலாக போதை பொருள் தொழில் உள்ளது.

போதை பொருள் புழக்கத்தில் ஈடுபட தமிழகத்தில் சின்டிகேட் உள்ளது...இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல கடல் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை மெட்ரிக் டன் கணக்கில் நமது கடற்படையினர், கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்கின்றனர்...சிறப்பாக இருந்த பஞ்சாப்  மாநிலம் தற்போது போதை பொருட்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் மருந்துகளால் வரும் பணத்தில் தான்  ஆஃப்கானிஷ்தான் பொருளாதாரமே உள்ளது...

தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம்...தேசிய வளர்ச்சிக்கு என்ஜின் ஆக செயல்ப்படுகிறது.

போதை பொருள் பிரச்சனை என்பது எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது...அது மிகப்பெரிய பிரச்சனை...நாம் போதை பொருள் புழக்கத்தை குறைக்க நினைக்க கூடாது.அதை முற்றிலும் வெளியேற்ற வேண்டும்.

போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகிறார்கள்...பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைகளிடம் பேச நேரம் இருப்பதில்லை, இது குறித்து பேசுவதில்லை.

நாம் போதை பொருட்கள் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பெற்றோர்கள் இருவரும் வேலை செய்பவர்களாக இருக்கலாம்...என்னவாக இருந்தாலும் குழந்தைகளிடம் பேச அவர்கள் நேர எடுத்துக் கொள்ள வேண்டும்...வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் சொல்வதில்லை ஏற்க முடியாது.

அப்பாக்கள் மகன் சொல்வதை விட மகள் சொல்வதை தான் அதிகமாக கேட்பார்கள்...நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் சென்று சொல்ல வேண்டும்..குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என நீங்கள் சொல்லுங்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா உலக அளவில் 6 ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது...அதன் பின் வந்த ஆட்சியாளர்களால் 11 ஆவது இடத்திற்கு சென்றது.

இன்று 5 ஆவது இடத்தில் இருக்கிறோம்...இந்தியா தற்போது அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையான நாடாக உள்ளது.

உலகத்தின் நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது...உலகத்தின் என்ஜின் ஆக இருக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறது...நாட்டில் ஒரு புரட்சி நடந்து வருகிறது...கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

இதையெல்லாம் உங்களை போன்ற  இளம் பெண்கள் தான் செய்து வருகிறார்கள்.

தற்போது பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது...அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண்கள் வளர்ச்சி என்பது வெறுமனே தனிநபர் வளர்ச்சி இல்லை..அது தேசிய வளர்ச்சி..பெண்கள் வளர்ந்தால் தேசம் வளரும்.

நான் உங்கள் வயதில் இருக்கும் போது மின்சாரம் இல்லை,சாலை வசதி இல்லை...இந்த காலத்தில் நான் உங்களைப் போன்று இளைஞராக இருந்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது நினைப்பது உண்டு...

இது நமது நாட்டிற்க்கு பொன்னான நேரம்...உங்கள் கனவுகளை போதை பொருட்கள் தடுக்கும்..எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏழுமலையான் கோயிலில் 6 ஆம் நாள் பிரம்மோற்சவம்.. கஜ வாகனத்தில், மகாவிஷ்ணு அலங்காரத்தில் சுவாமி

0
21 mins agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved