முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வீர் பூமியில் அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.