1978-ல் இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தை கடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. போலநாத் பாண்டே தனது 71வது அகவையில் உயிரிழந்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த சிலநாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டது.