வங்கதேசத்தின் கிழக்கு பகுதியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறினர். Comilla மற்றும் Feni மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து படகுகள் உதவியுடன் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறினர்.