சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரிடம் 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் முகமது சலீமை, செப்டம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.