திமுக MP தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய சென்னை MP ஆக இருந்த தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.