மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கு மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், வின் டிவி நிறுவனருமான தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான தேவநாதனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் தலைமறைவாக உள்ள நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சாலமன் மற்றும் ஏற்கனவே இருந்த பழைய இயக்குநர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.