கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் பெற்ற மகளைக் கொன்று கால்வாய் வீசி, தாய், தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். ஹாசன் மாவட்டம் பெற கெபீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாஸ் - ஸ்வேதா தம்பதி. கார் ஓட்டுநரான சீனிவாஸ் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதில்,பெரும் பணத்தை இழந்து கடன் தொல்லையால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாஸ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்தோடு மாயமானார். அவர்களை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரில் போலீசார் 3 பேரையும் தேடியபோது ஹேமாவதி கால்வாயில் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.