திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் விஜயின் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டும் எனவும், அவர் நினைத்தது எல்லாம் கைகூட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் புல்லட் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், நடிகர் விஜயின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.