மருத்துவத்துறையில் பணிட மாற்றம் கோரி தங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார். தேர்வு செய்யப்பட்ட மருந்தாளுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிநியமன ஆணைகள் முதலமைச்சர் வழங்கியதை தொடர்ந்து, மீதம் உள்ளவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் மருத்துவத்துறையில் மேலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பப்படும் என தெரிவித்தார்.