கேரளாவில் ஓடும் பேருந்தில் நடத்துனர் சரமாரியாக குத்தி கொலை சில நாட்களுக்கு முன்பு பேருந்தில் பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்த வாலிபரை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் நடத்துணறை பேருந்தில் வைத்து குத்திக் கொலை செய்தார் கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த அனீஷ் (வயது 34) இவர் எர்ணாகுளத்தில் இருந்து களமசேரி வழி தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் நடத்துனராக உள்ளார். இந்நிலையில் ஓடும் பேருந்தில் மூக கவசம் அணிந்து களமச்சேரி எ சந்திப்பில் பேருந்தில் ஏறிய இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனர் அனீஷ் கழுத்தில் 5 முறை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அனீஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்த பின் இளைஞர் பேருந்திலிஉந்து இறங்கி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த சிறுமியை கிண்டல் செய்ததற்காக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனிஷின் உடல் களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.