மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் உள்ள ஊரில் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண் காவலர்கள் வைத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று புதிய முறை செயல்படுத்தப்படுவதாக கூறினார்.