பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் மீது குற்றவியல் வழக்கு தொடர அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டவர்களிடம் நேரில் வழங்கப்பட்டதுஓரிரு நாளில் துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் உள்ளிட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முடிவுபெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்தது உறுதி செய்யப்பட்டதுடன், இந்த சம்பவத்தில் பல்கலை கழக துணை வேந்தர் குற்றமிழைத்தவர் என்று அறிவித்து துணை வேந்தர் மற்றும் முன்னாள் பதிவாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.இந்த நிலையில் அரசு வெளியிட்ட அரசாணையை பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதனிடம் சேலம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று நேரில் வழங்கினர்.மேலும் முன்னாள் பதிவாளர் உள்ளிட்டவர்களுக்கும் இந்த அரசாணை வழங்கப்பட்டு உள்ளது என்றும் அரசின் ஆணைப்படி பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுரு நாதர் உள்ளிட்டவர்கள் மீது ஓரிரு நாளில் சேலம் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களுடன் வழக்கு தொடர உள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது போன்று தொழிலாளர்கள் விவகாரத்தில் பல்கலை கழக துணை வேந்தர் மீது குற்றவியல் வழக்கு தொடர்வது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.